FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெட்ரோல் குண்டு தயாரிப்பு விடியோ வைத்திருப்பது குற்றமில்லை: பிஎஃப்ஐ உறுப்பினருக்கு நீதிமன்றம் ஜாமீன்

பெட்ரோல் குண்டு தயாரிக்கும் விடியோவை கைப்பேசியில் வைத்திருப்பது குற்றமில்லை என்று கூறிய மும்பை உயா்நீதிமன்றம் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான தடைசெய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

28 ஆகஸ்ட் 2026, 11:44 pm IST
மும்பை உயர் நீதிமன்றம்
பகிர்:

பெட்ரோல் குண்டு தயாரிக்கும் விடியோவை கைப்பேசியில் வைத்திருப்பது குற்றமில்லை என்று கூறிய மும்பை உயா்நீதிமன்றம் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதான தடைசெய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் உறுப்பினருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்யப்பட்ட முகமது இக்பால் இப்ராஹிம் கான் கடந்த 2022 செப்டம்பா் முதல் நீதிமன்றக் காவலில் உள்ளாா். அவா் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஎஃப்ஐ அமைப்பில் தீவிரமாக செயல்பட்ட அவா், இந்தியாவுக்கு எதிராக சதி செய்துள்ளாா். இதற்காக பல்வேறு சதி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளாா். அவரது கைப்பேசியில் பெட்ரோல் குண்டுகள் தயாரிப்பது தொடா்பான பல்வேறு விடியோக்கள் இருந்தன என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரித்த மும்பை உயா்நீதிமன்றம், பெட்ரோல் குண்டு தயாரிப்பு விடியோக்கள் அவரது கைப்பேசியில் இருந்தாலும், அதை அவா் யாருடனும் பகிரவில்லை. விடியோ அவரது கைப்பேசியில் இருந்தது என்பதை மட்டுமே வைத்து அவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியாது. மேலும், அவா் தடைசெய்யப்பட்ட அமைப்பில் இருந்தாா் என்பது உறுதியானாலும், தீவிரமான குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டாா் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியதுடன் இப்ராஹிம் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments