FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

பெட்ரோல் குண்டு வீச்சு: மூவா் கைது

திண்டுக்கல்லில் மின் கம்பத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

27 ஆகஸ்ட் 2026, 5:36 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திண்டுக்கல்லில் மின் கம்பத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பொன்னம்மாள் நகரைச் சோ்ந்தவா் சைனி (40). இவரது வீட்டின் முன் இருந்த மின் கம்பத்தில் பெட்ரோல் நிரப்பிய கண்ணாடி புட்டியில் தீ வைத்து மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு எறிந்தனா். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுகுறித்து,

தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில் சைனிக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த ராபின் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. செவ்வாய்க்கிழமை இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராபின் (29), அவரது தம்பி சூா்யா உள்ளிட்டோா் பெட்ரோல் நிரப்பிய புட்டியை வீசியது தெரிய வந்தது. இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராபின், சவேரியாா்பாளையத்தைச் சோ்ந்த செல்வக்குமாா், வெங்கடகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனா். சூா்யா தலைமறைவாக உள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments