ஸ்பெஷல்

விம்பிள்டன்: அதிக வெற்றிகள் பெற்று ரோஜர் ஃபெடரர் புது சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்று புது சாதனைகளைப் படைத்த முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

Raghavendran

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக வெற்றிகளைப் பெற்று புது சாதனைகளைப் படைத்த முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரர், 4-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

டென்னிஸ் விளையாட்டின் மிகவும் புகழ்பெற்ற விம்பிள்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியைச் சேர்ந்த ஜான்-லென்னார்ட் ஸ்டரஃப் உடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்று ஆட்டத்தில் மோதினார்.

இதில் ஒரு மணிநேரம் 34 நிமிடத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர்,  6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்டாரஃப்-ஐ எளிதாக வீழ்த்தி, 4-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க 9-ஆவது விம்பிள்டன் கோப்பையை வெல்லும் எண்ணத்துடன் களமிறங்கியுள்ள ஃபெடரர், பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் மேன்னேரினோ உடன் 4-ஆவது சுற்று ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

மேலும் இப்போட்டியில் ரோஜர் ஃபெடரர், சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

  • கடந்த விம்பிள்டன் தொடர் முதல் இதுவரை 29 செட்களை தொடர்ச்சியாக கைப்பற்றியுள்ளார்.
  • விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தொடர்ச்சியாக அதிக புள்ளிகள் (35 புள்ளிகள்) பெற்று விம்பிள்டன் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • கிராஸ் கோர்ட் எனப்படும் புல்தரை மீதான டென்னிஸ் போட்டிகளில் அதிக வெற்றிபெற்றவர்களில் ஜிம்மி கானர்ஸ்-ஐ கடந்து 175 வெற்றிகளுடன் ரோஜர் ஃபெடரர் முதலிடம் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT