ஸ்பெஷல்

ரஷித் கானை யாருக்கும் தரமுடியாது: ஆப்கானிஸ்தான் அதிபர் ட்வீட்!

எழில்

கொல்கத்தா அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஹைதராபாத் ஐபிஎல் போட்டியின் இறுதிச் சுற்றில் நுழைந்தது.

ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான ஐபிஎல் பிளே ஆஃப் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. டாஸ்  வென்ற கொல்கத்தா பீல்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு ஹைதராபாத் 174 ரன்களை எடுத்தது. இறுதி ஓவரில் ரஷித் 24 ரன்களைக் குவித்தார். அவர் 34 ரன்கள் எடுத்து  கடைசிக் கட்டத்தில் அணியின் ஸ்கோரைப் பெரிதாக உயர்த்தினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்து கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஹைதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டையும், கார்லோஸ், கெளல் தலா 2 விக்கெட்டையும், ஷகிப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.  

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் இறுதிச் சுற்றில் நுழைந்தது. வரும் 27-ம் தேதி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை சென்னையுடன் இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் மோதுகிறது.

சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் 4 சிக்ஸர், 2 பவுண்டரியுடன் 10 பந்துகளில் 34 ரன்களை குவித்தும், மேலும் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். ரஷித் கான் 4 சிக்ஸர் உள்பட 34 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 174 ஆக உயர்த்தி நம்பமுடியாத வெற்றியை தனது அணிக்கு அளித்துள்ளார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ரஷித் கானைப் பாராட்டி ட்வீட் செய்ததாவது: 

ரஷித் கானின் சாதனையில் ஆப்கானிஸ்தான் பெருமை கொள்கிறது. எங்களுடைய வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கித் தந்த இந்திய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆப்கானிஸ்தானின் சிறப்புகள் என்ன என்பதை ரஷித் கான் வெளிப்படுத்துகிறார். கிரிக்கெட் உலகின் முக்கிய சொத்தாக அவர் உள்ளார். அவரை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று இந்தியப் பிரதமர் மோடியை டேக் செய்து ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT