ஸ்பெஷல்

சாதனை நாயகனாகும் ஷகிப் அல் ஹசன்!

Raghavendran

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்துக்குப் பின்னர் பல சாதனைகளை ஷகிப் அல் ஹசன் தன்வசப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.

ஆல்ரவுண்டர் ஷகிப் 51 ரன்களுடன் தனது 45-ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார். இந்த உலகக் கோப்பையில் 5-ஆவது முறையாக அரைசதம் கடந்துள்ளார். தனது அபார பந்துவீசில் 5-29 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் 4-ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் ஷகிப் அல் ஹசன் செய்த சாதனைகளின் விவரம் பின்வருமாறு:

 உலகக் கோப்பையில் 1,000 ரன்கள் மற்றும் 30 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் ஆனார். 2007 உலகக் கோப்பையில் இருந்து பங்கேற்று வருகிறார்.

 ஆயிரம் ரன்கள் குவித்ததன் மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வங்கதேச வீரர் எனும் சாதனையைப் படைத்தார். 

 3-ஆவது வரிசை வீரர்களில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு (63.29) அடுத்தபடியாக அதிக சராசரி கொண்ட பேட்ஸ்மேனாக ஷகிப் (58.17) திகழ்கிறார்.

 தற்போது வரை 33 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதான் மூலம், உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்களில் 5-ஆவது இடத்தைப் பெற்றார். இதுவே உலகக் கோப்பையில் வங்கதேச வீரர் இதுவரை எடுத்துள்ள அதிகபட்ச விக்கெட்டுகளாகும்.

 உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வங்கதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதுவே உலகக் கோப்பையில் வங்கதேச வீரரின் சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.

 உலகக் கோப்பையில் 400 ரன்களுக்கு மேல் (தற்போது வரை 476 ரன்கள்) குவித்தும், 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆல்-ரவுண்டர் என்ற சாதனைப் படைத்தார். இதை வெறும் 6 ஆட்டங்களிலேயே சாதித்துள்ளார்.

 ஒரே உலகக் கோப்பைத் தொடரில் இரு சதங்கள் மற்றும் இருமுறை 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரானார்.

 ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கைப்பற்றிய 5/29 விக்கெட்டுகள் தான் ஒருநாள் போட்டிகளில் ஷகிப் அல் ஹசனின் சிறந்த பந்துவீச்சாகும்.

 தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்றதன் மூலம், உலகக் கோப்பையில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற வங்கதேச வீரர் என்ற பெருமையை ஷகிப் அல் ஹசன் பெற்றார்.

 தமீம் இக்பாலுக்குப் பிறகு தொடர்ந்து 5 அரைசதங்கள் கடந்த 2-ஆவது வங்கதேச வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

உலகக் கோப்பையில் வங்கதேச வீரர்களின் சிறந்த பந்துவீச்சு விவரம் பின்வருமாறு:

  • 5-29    ஷகிப் அல் ஹசன் - ஆப்கானிஸ்தான் (2019)
  • 4-21    ஷைஃபுல் இஸ்லாம் - அயர்லாந்து (2011)
  • 4-38    மஷ்ரஃபி மோர்தாஸா - இந்தியா (2007)
  • 4-53    ரூபெல் ஹுசைன் - இங்கிலாந்து (2015)

உலகக் கோப்பையில் சுழற்பந்துவீச்சாளர்களின் சிறந்த பந்துவீச்சு விவரம் பின்வருமாறு:

  • 5-16    ஷாகித் அஃப்ரிடி - கென்யா (2011)
  • 5-21    பால் ஸ்ட்ரேங் - கென்யா (1996)
  • 5-23    ஷாகித் அஃப்ரிடி - கனடா (2011)
  • 5-24    காலின்ஸ் ஒபுயா - இலங்கை (2003)
  • 5-29    ஷௌகத் துகன்வாலா - நெதர்லாந்து (1996)
  • 5-29    ஷகிப் அல் ஹசன் - ஆப்கானிஸ்தான் (2019)

ஒருநாள் போட்டிகளில் வங்கதேச வீரர்களின் சிறந்த பந்துவீச்சு விவரம் பின்வருமாறு:

  • 5-29    அப்துர் ரசாக் - ஜிம்பாப்வே (2009)
  • 5-29    ஷகிப் அல் ஹசன் - ஆப்கானிஸ்தான் (TODAY)
  • 5-30    அப்துர் ரசாக்  - ஜிம்பாப்வே (2010)
  • 5-33    அப்துர் ரசாக் - ஜிம்பாப்வே (2006)

ஒருநாள் போட்டிகளில் ஷிகப் அல் ஹசனின் சிறந்த பந்துவீச்சு விவரம் பின்வருமாறு:

  • 5-29    ஆப்கானிஸ்தான் - சௌதாம்ப்டன் (TODAY)
  • 5-47    ஜிம்பாப்வே - மிர்பூர் (2015)
  • 4-16    மேற்கிந்திய தீவுகள் - சட்டோகிராம் (2011)
  • 4-33    நியூஸிலாந்து - கிறைஸ்ட்சர்ச் (2010)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT