முகப்பு
செய்திகள்

அதிகமுறை எல்பிடபிள்யூ ஆன பிரபல பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

எல்பிடபிள்யூ தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.

Updated On : 30 டிசம்பர், 2016 at 1:43 PM
பகிர்:

டெஸ்ட் கிரிக்கெட்டில், எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்த 10000-வது வீரர் என்கிற பெருமை தென் ஆப்பிரிக்க வீரர் ஆம்லாவுக்குக் கிடைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பிரதீப்பிடம் 48 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்து கவனம் பெற்றுள்ளார்.  

இதையடுத்து எல்பிடபிள்யூ தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு முக்கிய புள்ளிவிவரங்களில் இரு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தவர் சச்சின் டெண்டுல்கர். மற்றவர்களை விடவும் அதிகமுறை (200) டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் சச்சின் முதலிடம் பிடித்துள்ளார் என்று அறியலாம். சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 296 முறை ஆட்டமிழந்துள்ளார். அதில் 63 முறை எல்பிடபிள்யூவால் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

Advertisement

அதேபோல இந்தியாவின் அனில் கும்ப்ளே, எல்பிடபிள்யூ முறையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். தன்னுடைய 619 விக்கெட்டுகளில் கும்ப்ளே 156 விக்கெட்டுகளை எல்பிடபிள்யூ உதவியுடன் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.