இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா-கூடைப்பந்து வீராங்கனை பிரதிமா சிங் திருமணம் வரும் டிசம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இப்போது திருமண தேதி முடிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதிமா சிங் வாரணாசியைச் சேர்ந்தவர். பிரதிமாவுக்கு 4 சகோதரிகள் உள்ளனர். அவர்களும் கூடைப்பந்து வீராங்கனைகள்தான். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இவர்களில் பிரதிமா இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்து தொடரில் இருந்து விலகிய மூத்த வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.