முகப்பு
செய்திகள்

லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது: கைவிரித்த இந்திய கிரிக்கெட் வாரியம்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட,  முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது... 

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:52 AM
பகிர்:

புதுதில்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ) செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட,  முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் பி.சி.சி.ஐ பிரமாணப் பாத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ) நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் அணியின் பேரில் முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவானது தனது விரிவான பரிந்துரைகளை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இது குறித்து நீதிமன்றத்திடம் தெரியப்படுத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு கடந்த 21-ந்தேதி உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் லோதா குழுவின் சில பரிந்துரைகளை அமல்படுத்த இயலாது என்று கிரிக்கெட் வாரியம் தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து உள்ளது. லோதா குழுவுக்கு இமெயில் மூலம் அனுப்பப்பட்ட இந்த பதில் பிரமாணப் பத்திரத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →