ரஞ்சி: தமிழக அணி மீண்டும் தடுமாற்றம்!
ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ரயில்வே அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பிலாஸ்பூரில் நடைபெற்று வரும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ரயில்வே அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடந்தமுறை மிகவும் மோசமாக விளையாடிய தமிழக பேட்ஸ்மேன்கள் இந்தமுறை பொறுப்புடன் பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரயில்வே அணியின் அபாரமான பந்துவீச்சினால் இந்தமுறையும் தடுமாற்றம் ஏற்பட்டது. முதல் இன்னிங்ஸில், 42.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தமிழகம். மலோலன் ரங்கராஜன் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். ரயில்வேயின் தீபக் பன்சால் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதற்கு முன்பு, ரோதக்கில் நடைபெற்ற ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தமிழக அணியைத் தோற்கடித்தது.