செய்திகள்

அமெரிக்க ஓபன்: அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ், பிளிஸ்கோவா!

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு  செரீனா வில்லியம்ஸ், கரோலினா வோஸ்னியாக்கி, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்கள். 

DIN

மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செரீனா வில்லியம்ஸ், பிளிஸ்கோவா, கரோலினா வோஸ்னியாக்கி, ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார்கள். 

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் சிமோனா ஹாலேப்பைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னெறினார். 

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா,  6-2, 6-2 என்ற நேர் செட்களில் அனா கோன்ஜூவைத் தோற்கடித்தார். இவர், அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸுடன் மோதவுள்ளார்.

அதேபோல, மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கி - ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனான ஏஞ்சலிக் கெர்பர், இத்தாலியின் ராபர்டா வின்ஸியை எதிர்கொண்டார். 1 மணி நேரம் 17 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-0 என்ற செட் கணக்கில் வென்றார் கெர்பர்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், லாத்வியாவின் அனஸ்டாஸிஜா செவஸ்டோவாவை எதிர்கொண்டார் கரோலினா வோஸ்னியாக்கி. இருவருக்கும் இடையே 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் 6-0, 6-2 என்ற செட் கணக்கில் வோஸ்வினியாக்கி வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி - (தெலுங்கு) டிரெய்லர்!

வேணும் மச்சா பாடல்!

கட்டான கட்டழகி... பிரக்ரிதி பவனி!

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அழகும் அறிவும்... ஷான்வி ஸ்ரீவஸ்தவா!

SCROLL FOR NEXT