முகப்பு
செய்திகள்

தமிழக கிரிக்கெட் வீரர் எல்.பாலாஜி ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய, தமிழகத்தைச் சேர்ந்த எல். பாலாஜி...

Updated On : 15 செப்டம்பர், 2016 at 2:49 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 10:05 AM

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய, தமிழகத்தைச் சேர்ந்த எல். பாலாஜி, முதல்தர கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 8 டெஸ்டுகள் விளையாடிய பாலாஜி தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் முதல்தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

16 வருடங்கள் விளையாடியுள்ளேன். டிஎன்பில், ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளில் மட்டும் இனி விளையாடவுள்ளேன் என்று பாலாஜி கூறியுள்ளார்.

Advertisement

2004-ல் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்திய வீரராக விளங்கினார் பாலாஜி. அவருடைய கிரிக்கெட் வாழ்வில் அது மறக்கமுடியாத தருணம் ஆகும்.

34 வயது எல். பாலாஜி, 106 முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்று 1,202 ரன்களையும், 330 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.