செய்திகள்

டி20: பாகிஸ்தான் வெற்றி

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது பாகிஸ்தான்.
துபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, இமாத் வாசிம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆட்டம் கண்டது. ஒரு கட்டத்தில் அந்த அணி 22 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
ஆனால் தனிநபராகப் போராடிய டுவைன் பிராவோ 54 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜெரோம் டெய்லர் 21 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 19.5 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மேற்கிந்தியத் தீவுகள். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசிம் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் சர்ஜீல் கான் 22 ரன்கள் சேர்த்து வெளியேற, காலித் லத்தீஃப்-பாபர் ஆஸம் ஜோடி அசத்தலாக ஆடி வெற்றி தேடித்தந்தது. பாகிஸ்தான் அணி 14.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் சாமுவேல் பத்ரீ ஒரு விக்கெட் எடுத்தார். 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT