செய்திகள்

கான்பூர் டெஸ்ட்: இந்தியா 377 ரன்களில்  டிக்ளேர்: நியூசிலாந்துக்கு வெற்றி இலக்கு 434!

DIN

கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு 434 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரின்  கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 262 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 75 ரன்னும், டாம் லாதம் 58 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 64 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் இன்று நான்காம் நாள்  ஆட்டம் நடைபெற்றது. 2-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் - புஜாரா ஜோடி 133 ரன் எடுத்தனர். முரளி விஜய் 76 ரன் எடுத்து இருந்த போது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 185 ஆக இருந்தது.அதன் பின்னர் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்த கோஹ்லி- புஜாரா ஜோடியும் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஜடேஜா-ரோகித் சர்மா ஜோடியில் ரோகித் சர்மா 68 ரன்கள்; ஜடேஜா 50 ரன்கள் எடுத்திருந்தனர்.

5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற  நியூசிலாந்துக்கு 434 ரன்கள்  என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT