செய்திகள்

எப்பப்பா கல்யாணம்? உசேன் போல்டிடம் தாய் கோரிக்கை!

தன்னுடைய திருமணம் குறித்து ஒரு பேட்டியில் போல்ட் கூறியதாவது:

DIN

உசேன் போல்ட், உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர். 120 ஆண்டுகால நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீ. மற்றும் 200 மீ., 4*100 மீ. தொடர் ஓட்டங்களில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்ற முதல் நபர். 2008 முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் போல்ட், 100 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 200 மீ. ஓட்டத்தில் 3 தங்கம், 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் 3 தங்கம் என மொத்தம் 9 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்தச் சாதனைகள் ஒலிம்பிக் வரலாற்றில் உடைக்க வாய்ப்பில்லாத ஒன்று. மேற்கண்ட 3 போட்டிகளிலுமே உலக சாதனையும் போல்ட் வசமேயுள்ளது.

30 வயது போல்ட், காசி பென்னட் என்கிறவரைக் காதலித்துவருகிறார். தன்னுடைய திருமணம் குறித்து ஒரு பேட்டியில் போல்ட் கூறியதாவது: இப்போதைக்கு நான் திருமணம் செய்ய விரும்பவில்லை. ஆனால் நான் சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று என் அம்மா விரும்புகிறார். அவரிடம் கொஞ்சம் கால அவகாசம் கேட்டுள்ளேன். பென்னட்டும் திருமணம் குறித்து இதுவரை என்னிடம் பேசியதில்லை என்றார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT