மியாமி ஓபன்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி!
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவின் அரையிறுதியில், சானியா - ஸ்டிரைகோவா ஜோடி, மார்டினா ஹிங்கிஸ் - சான் யுன் ஜோடியை 7-6 (8), 6-1 (10-4) என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
2017-ல் சானியா - ஸ்டிரைகோவா ஜோடிக்கு இது இரண்டாவது இறுதிப்போட்டியாகும். சிட்னியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்த ஜோடி தோல்வியைத் தழுவியது.
Advertisement
சானியா ஜோடி இறுதிச்சுற்றில் காப்ரியலா - யிஃபான் ஜோடியை எதிர்கொள்கிறது.