செய்திகள்

கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி - தோனி!

கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் இன்று கூறியுள்ளதாவது:

எழில்

2011-ல் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையை வென்றபிறகு கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டார் தோனி. ஐபிஎல்-லில் தோனி தலைமை வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் கல்ஃப் ஆயில் நிறுவனம் இணைந்து பணியாற்றியது. பிறகு தற்போது இதே பணியை தோனி இடம்பெற்றுள்ள புணே ஐபிஎல் அணியுடனும் இணைந்து செய்துவருகிறது. மேலும், தோனியின் அறக்கட்டளையுடனும் கல்ஃப் ஆயில் நிறுவனம் இணைந்து செயல்பட்டுவருகிறது. 

இந்நிலையில் கல்ஃப் ஆயில் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் இன்று கூறியுள்ளதாவது: எங்கள் நிறுவனத்தின் இன்றைய நாளின் தலைமைச் செயல் அதிகாரி தோனிக்கு வரவேற்பு அளியுங்கள் என்று ட்வீட் வெளியிட்டுள்ளது. கூடவே தோனியின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

தோனி, என். சீனிவாசன் தலைமை வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸின் துணைத் தலைவராகவும் உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT