செய்திகள்

27 மாநிலங்கள், 27 விக்கெட் கீப்பர்கள்: கடும் போட்டி குறித்து தினேஷ் கார்த்திக்!

எழில்

கடந்த ஒருவருடமாக உள்ளூர் போட்டிகளில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அசத்தி வருகிறார். 36 இன்னிங்ஸ்களில் 1872 ரன்கள்!

சரி இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு மீண்டும் இடம் கிடைக்குமா?

இதுகுறித்து ஒரு பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறியதாவது: தோனி இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும்போதே நான் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடித்துள்ளேன். அதை ஏன் என்னால் மீண்டும் செய்யமுடியாது. கீப்பிங், பேட்டிங் என இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் இந்தியாவுக்காக விளையாடவேண்டும்.

சாம்பியன்ஸ் டிராபி குறித்து நான் இப்போதே யோசிக்கவில்லை. ஐபிஎல்-லில் நன்றாக விளையாடவேண்டும். அதுதான் என் குறிக்கோள். இளம் விக்கெட் கீப்பர்கள் எனக்குக் கடும் போட்டியாக இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 27 மாநிலங்களில் 27 விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். போட்டி என்பது எப்போதும் இருக்கும். என் திறமையின் மீது நம்பிக்கை வைக்கிறேன். அதில்தான் என்னால் கவனம் செலுத்தமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT