முகப்பு
செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் ஐபிஎல்-லில் களமிறங்குகிறார் கோலி!

ஏப்ரல் 14 அன்று பெங்களூருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளது.

செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டுத் தினத்தில் ஐபிஎல்-லில் களமிறங்குகிறார் கோலி!

ஏப்ரல் 14 அன்று பெங்களூருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:16 PM
பகிர்:

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டங்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவில்லை. இதையடுத்து ஐபிஎல் போட்டியில், தான் களமிறங்கும் தேதியை கோலி அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது கோலிக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 4-வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, 'எனது காயம் 100 சதவீதம் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும்' எனத் தெரிவித்திருந்தார். அதனால் அவர் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. கோலி இன்றி இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியுள்ள பெங்களூர் அணி இரண்டில் தோல்வியைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில், ஏப்ரல் 14 அன்று பெங்களூரில் பெங்களூருக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையே ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளது. இதில் தான் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக கோலி, இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் தகவல் அளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →