முகப்பு
செய்திகள்

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் கோலி அணி!

இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்...

Updated On : 17 ஏப்ரல், 2017 at 3:51 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:48 PM

ஐபிஎல் அணிகளில் மிகவும் பலம் பொருந்தியதாக மதிப்பிடப்படும் பெங்களூர் அணி இந்த ஐபிஎல்-லில் மிகவும் மோசமாக விளையாடிவருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் தோற்று 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-ஆவது லீக் ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ். கோலி ஆரம்ப ஆட்டங்களில் விளையாடாதது, கெய்லின் மோசமான ஃபார்ம் போன்றவை அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. 

ரெய்னா தலைமையில் உள்ள குஜராத் அணியும் 2 புள்ளிகளுடன் உள்ளது. ஆனால் அந்த அணி 4 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளது. கடைசி இரு இடங்களில் உள்ள இவ்விரு அணிகளும் நாளை மோதுகின்றன.

Advertisement

புள்ளிகள் பட்டியலில் மும்பை, கொல்கத்தா அணிகள் முதலிரண்டு இடத்தைப் பிடித்துள்ளன. தோனி இடம்பெற்றுள்ள புணே அணி 5 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.