டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி புதிய சாதனை!
மற்ற அனைத்து வீரர்களை விடவும் மிகவிரைவாக 350 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார்...
இந்திய கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் தில்லி ஃபெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. தலா 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தத் தொடரில் 3-வது டெஸ்ட் ஆட்டம் தொடங்கியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டம் டிரா ஆன நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், 3 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்கியுள்ளார்கள். டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் 31-வது ஓவரின்போது 24 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த கோலி, பவுண்டரி அடித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களை அவர் கடந்தார். இந்த இலக்கை எட்டும் 11-வது இந்தியர் என்கிற பெருமையை கோலி பெற்றுள்ளார். 105 இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.
அதேபோல 42 ரன்களில் இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் 16000 ரன்களைப் பூர்த்தி செய்தார் கோலி. மற்ற அனைத்து வீரர்களை விடவும் மிகவிரைவாக 350 இன்னிங்ஸில் இந்த ரன்களை எடுத்து சாதனை செய்துள்ளார்.
அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள்
ஸ்மித் - 97 இன்னிங்ஸ்
கோலி, ரூட் - 105 இன்னிங்ஸ்
ஆம்லா, வார்னர் - 109 இன்னிங்ஸ்
வில்லியம்சன் - 110
அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள்
கவாஸ்கர் - 95 இன்னிங்ஸ்
சேவாக் - 98 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் - 103 இன்னிங்ஸ்
கோலி - 105 இன்னின்ங்ஸ்
டிராவிட் - 108 இன்னிங்ஸ்
அதிக டெஸ்ட் ரன்கள் - இந்தியர்கள்
சச்சின் - 15921 ரன்கள்
டிராவிட் - 13265 ரன்கள்
கவாஸ்கர் - 10122 ரன்கள்
லக்ஷ்மண் - 8781 ரன்கள்
சேவாக் - 8503 ரன்கள்
கங்குலி - 7212 ரன்கள்
வெங்சர்கார் - 6868 ரன்கள்
அசாருதீன் - 6215 ரன்கள்
விஸ்வநாத் - 6080 ரன்கள்
கபில் தேவ் - 5248 ரன்கள்
கோலி - 5000 ரன்கள்*
அதிவேக 16000 ரன்கள்
விராட் கோலி - 350 இன்னிங்ஸ்
ஆம்லா - 363 இன்னிங்ஸ்
டெண்டுல்கர் - 376 இன்னிங்ஸ்