முகப்பு
செய்திகள்

கேப்டன் கோலியின் புத்தம் புதிய சாதனைகள்!

இந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, அதிக டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய அணியுடன் சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளது... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:17 PM
பகிர்:

0, 104*, 213, 243, 50

மூன்று சதங்கள். அதில் இரு இரட்டைச் சதங்கள். 610 ரன்கள். சராசரி - 152.50. 

இதற்கு மேல் இன்னொருவரைத் தேர்வு செய்யமுடியுமா?

இந்தியா - இலங்கை இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஆட்ட நாயகன் மட்டுமல்லாமல் தொடர் நாயகன் விருதும் விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த டெஸ்ட் தொடரை வென்றுள்ள இந்திய அணி, அதிக டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றிய அணியுடன் சாதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.  இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 2005-ஆம் ஆண்டிலிருந்து 2008-ஆம் ஆண்டு ஆண்டு வரையும் தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனைப் படைத்தது. இந்தச் சாதனையை கேப்டன் கோலி தலைமையிலான இந்திய அணி சமன்
செய்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியான தொடர் வெற்றிகள்

9 - ஆஸ்திரேலியா, 2005/06-2008
9* - இந்தியா, 2015-2017/18*
8 - இங்கிலாந்து, 1884-1890

ஒரு வருடத்தில் அதிக வெற்றிகளைக் கண்ட கேப்டன்கள்

31 - ரிக்கி பாண்டிங், 2005 ( வேர்ல்ட் XI அணிக்காக ஒரு வெற்றி)
31 - விராட் கோலி, 2017
29 - ஜெயசூர்யா, 2001
29 - ரிக்கி பாண்டிங், 2003
29 - ரிக்கி பாண்டிங், 2007
29 - கிரீம் ஸ்மித், 2007

முழு கட்டுரையைப் படிக்க →