செய்திகள்

ஐசிசி தரவரிசை: 5-வது இடத்துக்கு முன்னேறினார் ரோஹித் சர்மா!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்...

எழில்

ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

2016 பிப்ரவரி-யில் மூன்றாம் இடம் பிடித்த ரோஹித் சர்மா, தற்போது முதல்முறையாக 800 புள்ளிகள் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் மூன்றாவது இரட்டைச் சதமெடுத்த ரோஹித்  சர்மா, தற்போது 825 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற ஷிகர் தவன், 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் 876 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். டி வில்லியர்ஸ், டேவிட் வார்னர், பாபர் அசாம், ரோஹித் சர்மா ஆகியோர் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் பாகிஸ்தானின் ஹசன் அலி முதலிடத்தில் உள்ளார். அடுத்த நான்கு இடங்களில் இம்ரான் தஹிர், ஜஸ்ப்ரித் பூம்ரா, ஜோஸ் ஹேஸில்வுட், ரபாடா ஆகியோர் உள்ளார்கள்.

இலங்கை அணியை இந்தியா 3-0 என ஒருநாள் தொடரில் தோற்கடித்திருந்தால் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும். அது நிகழாததால் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. அதற்கடுத்த இடங்களை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் தக்கவைத்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT