முன்னாள் வீரர் சபா கரீமுக்கு பிசிசிஐயில் முக்கியப் பதவி!
சபா கரீம் இந்தியா சார்பாக ஒரு டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்...
முன்னாள் வீரர் சபா கரீம் பிசிசிஐ-யின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் பிசிசிஐயின் பொது மேலாளராகப் பதவி வகித்த ஸ்ரீதர் அந்தப் பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் அக்டோபர் 30 அன்று அவர் காலமானார்.
இதையடுத்து முன்னாள் வீரர் சபா கரீம் பிசிசிஐயின் பொது மேலாளராக (கிரிக்கெட் பணிகள்) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 1 முதல் இப்பதவியை வகிப்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சபா கரீம் இந்தியா சார்பாக ஒரு டெஸ்ட் மற்றும் 34 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2012-ல் தேர்வுக் குழு உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பங்கேற்றார்.