செய்திகள்

இங்கிலாந்தின் வெற்றி மழையால் பாதிக்கப்படுமா? ஆஸ்திரேலியா 103/2

எழில்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. 

மெல்போர்ன் நகரில் பாக்ஸிங் டே அன்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான டேவிட் வார்னர் சதமடித்து அணியை வலுப்படுத்தினார். கேப்டன் ஸ்மித் 76, ஷான் மார்ஷ் 61 ரன்கள் சேர்த்து உதவ, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 119 ஓவர்களில் 327 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து  3-ஆம் நாள் முடிவில் 144 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 491 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து. அலாஸ்டர் குக் 244 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆன்டர்சன் ரன்கள் இன்றியும் களத்தில் இருந்தார்கள். 

3-ஆவது நாள் ஆட்டத்தில் இரட்டைச் சதம் விளாசிய அலாஸ்டர் குக், 209 ரன்களை எட்டியபோது புதிய சாதனை படைத்தார். இது, மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்நிய பேட்ஸ்மேன் ஒருவர் அடிக்கும் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவானான விவியன் ரிச்சர்ட்ஸ், கடந்த 1984-ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 208 ரன்கள் எட்டியதே அதிகபட்சமாக இருந்தது.

தனது 151-ஆவது டெஸ்டில் ஆடி வரும் அலாஸ்டர் குக், டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 11,956 ரன்களை எட்டியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6-ஆவது வீரர் என்ற பெருமையை பெற்ற குக், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவை (11,953) பின்னுக்குத்தள்ளினார். டெஸ்ட் போட்டிகளில் குக் 150 ரன்களுக்கு மேலாக எடுப்பது இது 11-ஆவது முறையாகும். அதிலும், ஆஸ்திரேலியாவில் எடுப்பது இது 3-ஆவது முறையாகும். இங்கிலாந்து வீரர்களில் வேறு எவரும் ஒட்டுமொத்தமாக இத்தனை முறை 150 ரன்களை தாண்டியதில்லை.

இந்நிலையில் இன்று வீசிய முதல் பந்திலேயே ஆண்டர்சனை டக் அவுட் ஆக்கினார் கம்மின்ஸ். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 144.1 ஓவர்களில் 491 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குக் 244 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேஸில்வுட், நாதன் லயன் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதன்பிறகு தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, மதிய உணவு இடைவேளையின்போது 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது. 

பிறகு ஆட்டம் சில ஓவர்களே நீடித்தன. 44-வது ஓவரின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. மாலை 5.15 வரை ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 4-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 43.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 40, ஸ்மித் 25 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 61 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

இந்த டெஸ்ட் போட்டியில் இன்னும் ஒருநாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் மீதமுள்ள 8 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி வெற்றி பெற இங்கிலாந்து அணி முயற்சி செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT