செய்திகள்

உலக ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்!

எழில்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ரியாத் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 9-வது சுற்றில் ஆனந்த் வென்று ஆச்சர்யப்படுத்தினார். 15 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் உள்ளிட்ட மூவர் 10.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தார்கள். 

ஒரு தோல்வியும் அடையாமல் ஆறு வெற்றிகள், 9 டிராக்கள் மூலம் முதல் இடத்தைப் பிடித்தார் ஆனந்த். பிறகு டை பிரேக் முறையில் உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஆனார் ஆனந்த். டை பிரேக் போட்டியில் ரஷ்யாவின் ஃபெடோசீவை 1.5-0.5 என்கிற கணக்கில் தோற்கடித்ததால் சாம்பியன் பட்டம் ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT