வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி.
இந்திய அணி ஆகஸ்ட் 2015 முதல் தொடர்ந்து 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இதற்கு முன்பு அக்டோபர் 2008 முதல் ஜனவரி 2010 வரை வென்ற இந்திய அணியின் 5 டெஸ்ட் தொடர்களின் வெற்றிச் சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற பட்டியலிலும் கோலி இடம்பிடித்துள்ளார்.
26 லாயிட் (1982-84)
22 பாண்டிங் (2005-07)
19 இல்லிங்வொர்த் (1969-71)
19 கோலி*
தோல்வியின்றி அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்கிற பெருமையும் கோலிக்குக் கிடைத்துள்ளது. இதில் கவாஸ்கரின் சாதனையைத் தாண்டியுள்ளார் கோலி.
19 விராட் கோலி*
18 கவாஸ்கர்
17 கபில் தேவ்
14 அசாருதீன்
11 தோனி
அதேபோல தோனி இதுவரை 7 சர்வதேச தொடர்களை (டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவகை கிரிக்கெட்டிலும்) தோல்வியின்றி தொடர்ச்சியாக ஜெயித்ததே இந்திய சாதனையாக இருந்துவந்தது. இப்போது இந்த டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 8 சர்வதேச தொடர்களை வென்ற முதல் இந்திய கேப்டன் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் கோலி.
9 டெஸ்ட் அணிகளுக்கு எதிராக இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.