செய்திகள்

ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டி: சந்தீப் குமார் தேசிய சாதனை

DIN

ஆடவர் 50 கி.மீ. நடைப் போட்டியில் சந்தீப் குமார் தேசிய சாதனை படைத்தார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான நடைப் போட்டியில் 50 கி.மீ. பிரிவில் பங்கேற்ற சந்தீப் குமார் 3 மணி, 55 நிமிடம், 59.05 விநாடிகளில் இலக்கை எட்டினார். இதன்மூலம் தங்கப் பதக்கம் வென்ற அவர், தனது பழைய தேசிய சாதனையை முறியடித்தார். முன்னதாக 2014-இல் சீனாவில் நடைபெற்ற உலக நடைப் போட்டியில் சந்தீப் குமார் 3 மணி, 56 நிமிடம், 22 விநாடிகளில் இலக்கை எட்டியதே தேசிய சாதனையாக இருந்தது. இதுதவிர வரும் ஆகஸ்டில் நடைபெறவுள்ள லண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவும் சந்தீப் குமார் தகுதி பெற்றுள்ளார்.
சந்தீப் குமாருக்கு அடுத்தபடியாக ஜிதேந்தர் சிங் (4:02:11.58) வெள்ளிப் பதக்கமும், சந்தன் சிங் (4:04:18.41) வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜிதேந்தர் சிங், சந்தன் சிங் ஆகியோரும் லண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தேசிய சாதனை படைத்திருப்பது குறித்துப் பேசிய சந்தீப் சர்மா, "எனது பழைய தேசிய சாதனையை முறியடித்திருப்பதோடு, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது, எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.
அடுத்ததாக உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகவுள்ளேன். அதில் சிறப்பாக செயல்படுவேன் என நம்புகிறேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டி, ஆசிய விûளாட்டுப் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு. அதற்கடுத்தபடியாக 2020-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT