செய்திகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்வைத்து தோனியைக் கிண்டலடித்த சேவாக்!

DIN

புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டின்போது முன்னாள் வீரர் சேவாக்கை சுனில் கவாஸ்கர் பேட்டி கண்டார். அப்போது ஷேவாக்கிடம், தோனி யாருடைய தொலைப்பேசி அழைப்புகளையும் எடுப்பதில்லை என்று கேள்விப்படுகிறேனே என்று கேள்வி எழுப்பினார் கவாஸ்கர்.

அதற்கு சேவாக் கூறியதாவது: நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரராக இருந்தால் அவரிடமிருந்து பதில் கிடைக்கும் என்று நகைச்சுவையாகப் பேசினார். 

பொதுவாக தோனி எந்த ஒரு வீரருடைய தொலைப்பேசி அழைப்புகளுக்கும் உடனே பதில் அளிக்கமாட்டார். முன்னாள் வீரர் லட்சுமணன், ஓய்வு பெறுகிற சமயத்தில் தோனிக்கு போன் செய்தேன். ஆனால் அவரை போனில் பிடிக்கமுடியவில்லை என்று பேட்டிகொடுத்தது ஞாபகம் இருக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரெய்னா, ஜடேஜா ஆகியோருடன் தோனி நெருங்கிப் பழகுவார். இதனால் இதுபோன்ற ஒரு கிண்டலான பதிலைச் சொல்லியிருக்கிறார் சேவாக். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT