முகப்பு
செய்திகள்

பயிற்சி ஆட்டம் டிரா: கோலி, ராகுல் அரை சதம்!

இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகளுக்கு இடையேயான இருநாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

Updated On : 22 ஜூலை, 2017 at 4:32 PM
பகிர்:

இந்தியா - இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகளுக்கு இடையேயான இருநாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆகியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 187 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. 

இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, 68 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் ராகுல், கோலி ஆகியோர் அரை சதம் எடுத்தார்கள். இதையடுத்து இருநாள் ஆட்டம் டிராவில் முடிந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.