செய்திகள்

மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு தலா ரூ.13 லட்சம் பரிசு

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கேப்டன் மிதாலி ராஜ் உள்ளிட்ட 10 ரயில்வே வீராங்கனைகளுக்கு தலா ரூ.13 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, அதில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. இந்திய வீராங்கனைகள் உலகக் கோப்பையை நழுவவிட்டாலும், இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரயில்வே வீராங்கனைகளுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. அதில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கலந்து கொண்டு வீராங்கனைகளை பாராட்டினார். அப்போது 10 வீராங்கனைகளுக்கும் தலா ரூ.13 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். ரயில்வேயில் பணியாற்றி வரும் மிதாலி ராஜுக்கு பதவி உயர்வும் கிடைத்துள்ளது. அவர், முதன்மை கண்காணிப்பாளராக (விளையாட்டு) பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT