முகப்பு
செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: வங்கதேசம் பேட்டிங்!

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளது. 

Updated On : 1 ஜூன், 2017 at 3:24 PM
பகிர்:


மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியுள்ளது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டம் லண்டனில் இன்று தொடங்கியுள்ளது. இதில் இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை வென்ற உற்சாகத்தில் களமிறங்கும் இங்கிலாந்து அணி, முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியோடு தொடங்கும் முனைப்பில் களம் காணுகிறது. வங்கதேச அணி சமீபகாலமாக கணிக்க முடியாத வகையில் ஆடி வருகிறது. எனினும் இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணிக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.