செய்திகள்

இந்தியப் பயிற்சியாளர் விசயத்தில், நான் இப்படியெல்லாம் சொன்னேனா?! இந்திய மீடியாக்களிடம் பொங்கிய ஷேர்ன் வார்னே!

THANYAA

47 வயது ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான ஷேர்ன் வார்னே இன்று தனது ட்விட்டர் தளத்தில், இந்தியா மீடியாக்கள், இந்தியப் பயிற்சியாளர் பதவிக்கான தேர்வை ஒட்டி தம்மைப் பற்றி வெளியிட்ட செய்திகள் குறித்து கோபாவேஷத்தில் பொங்கி இருக்கிறார்.

சில மீடியாக்கள்; இந்திய கிரிக்கெட் வாரியத்தைப் பொறுத்தவரை வார்னே காஸ்ட்லியானவர். அவருக்கு கட்டணம் அளிக்க 'பிசிசிஐ' யால் முடியாது என்ற ரீதியில் வார்னேவைப் பற்றி குறிப்பிட்டிருந்தன.

நான் மிகவும் விலை உயர்ந்தவனாக இருக்கிறேன், நான் கேட்பதை அவர்களால் அளிக்க முடியுமா? என்று எனக்குத் தெரியவில்லை. என்றொரு பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. சில மீடியாக்களிலோ; நானும் விராட் கோலியும் களத்தில் சிறந்த பார்ட்னர்களாக இருக்கக் கூடும். ஆனால் நான் முன்னதாகச் சொன்னபடி, நான் மிக, மிக விலை உயர்ந்தவன் என்று சொன்னதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி தனது ட்விட்டர் தளத்தில் விரட் கோலிக்கு விளக்கம் அளித்த ஷேர்ன் வார்னே; “நான் விராட் கோலியுடன் இணைந்து செயல்படும் போது நன்றாக வேலை செய்வேன் என்று சொன்னதாகப் சில பத்திரிகைகளில் திரித்து எழுதி இருக்கிறார்கள். இந்திய மீடியாக்களில் என்னைப் பற்றி வெளியான இந்த செய்திகள் அனைத்தும் வலிந்து உருவாக்கப் பட்ட செய்திகளே! மிக மிக ஏமாற்றமளிக்கும் மோசமான ஜர்னலிஸம் இது. நான் அப்படியெல்லாம் கூறவில்லை. என்று வார்னே ட்வீட்டியிருக்கிறார். 

தற்போதைய இந்தியப் பயிற்சியாளரான அனில் கும்ளேவின் பதவிக் காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவடைகிறது.
வரப்போகும் ICC சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு முன்னதாக இந்தியப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்து விடும் உத்தேசத்தில் அந்தப் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

இந்தப் பதவிக்கு இது வரை விண்ணப்பித்த கிரிக்கெட் பிரபலங்கள் லிஸ்ட் வீரேந்தர் சேவாக், டாம் மூடி, கிரேக் மெக்டர்மட், ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புத், தோடா கணேஷ், மீண்டும் அனில் கும்ளே என நீள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT