முகப்பு
செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டி: தென் ஆப்பிரிக்கா பேட்டிங்!

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Updated On : 7 ஜூன், 2017 at 5:54 PM
பகிர்:

எட்பாஸ்டனில் இன்று நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும், பாகிஸ்தானும் மோதிவருகின்றன.

முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க அணி, இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கோ, இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, இந்த ஆட்டத்தில் வென்றாலொழிய அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியாது என்ற நிலையில் களமிறங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.