செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா பேட்டிங்; அஸ்வின் மீண்டும் ஏமாற்றம்!

இலங்கைக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

எழில்

இந்தியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் இந்த ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகிறது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேறும். நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் உரிய உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் களம் இறங்கியுள்ளனர். அதேவேளையில் இலங்கை அணியானது, தனது முந்தைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. ஆகவே, இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டு அந்தத் தோல்வியிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியினர் உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அதேபோல இந்தப் போட்டியிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய அதே அணியே இந்தமுறையும் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எய்ம்ஸ் வராது; மெட்ரோ தராது - இது பாஜக அரசியல் - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

ரோஹித், கோலியின் அனுபவம் மிகவும் முக்கியம், ஆனால்... கௌதம் கம்பீர் கூறுவதென்ன?

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT