செய்திகள்

கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி: ரயில் முன் பாய்ந்து ரசிகர் தற்கொலை!

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியைத் தாங்கமுடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்... 

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியைத் தாங்கமுடியாமல், வங்கதேசத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்வது இதுவே முதல்முறையாகும். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஃபகார் ஸமான் ஆட்டநாயகனாகவும், ஹசன் அலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் முடிவைத் தாங்கமுடியாமல், வங்கதேசத்தின் ஜமல்பூரில் உள்ள 25 வயது இந்திய கிரிக்கெட் ரசிகரான பித்யுத், நேற்றிரவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை வங்கதேச காவல்துறையும் உறுதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!

மும்பையில் புதிய மேம்பாலம்: முதல்வர் ஃபட்னவீஸ் திறந்து வைத்தார்!

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

முன்அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது! - தவெக

SCROLL FOR NEXT