முகப்பு
செய்திகள்

பாக். வீரர் அசார் அலி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய வீரர்கள்

பாகிஸ்தான் வீரர் அசார் அலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

Updated On : 21 ஜூன், 2017 at 3:18 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:18 PM

இருநாடுகள் இடையே அரசியல் காரணமாக பகைமை நிலவி வந்தாலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் ஆடுகளத்தில் நட்புணர்வையே வெளிப்படுத்திவருகிறார்கள்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தாலும் போட்டி முடிவடைந்தபிறகு சோயிப் மாலிக், அசார் முகமது ஆகியோருடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார் கோலி. 

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூன்று புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அதில் தோனி, கோலி, யுவ்ராஜ் ஆகிய மூன்று வீரர்களும் அசார் அலியின் இரு மகன்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள். இப்படங்களை வெளியிட்டு மூவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் அசார் அலி. 

Advertisement

இதற்கு முன்பு பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது மகனுடன் தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதையடுத்து அசார் அலி இப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.