செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் மோதல்!

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சாய் பிரணீத் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள். 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ஸ்ரீகாந்த் 15-21, 21-13, 21-13 என்ற செட் கணக்கில் உலகின் நெ.1 வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை வீழ்த்தினார். சமீபத்தில் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். சூப்பர் சீரிஸ் போட்டியில் ஸ்ரீகாந்த் வென்ற 3-வது பட்டம் இது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 21-15, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை வீழ்த்தினார். 

காலிறுதியில் ஸ்ரீகாந்த் - சாய் பிரணீத் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். இருவரும் இதுவரை 6 முறை மோதியுள்ளார்கள். அதில் சாய் பிரணீத் 5-1 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் இந்தியர்கள் இருவரும் மோதும் காலிறுதிப் போட்டி சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT