செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச் சுற்றில் ஸ்ரீகாந்த்

DIN

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 21-10, 21-14 என்ற நேர் செட்களில் சீனாவின் ஷி யூகியைத் தோற்கடித்தார்.
சூப்பர் சீரிஸ் போட்டியில் தொடர்ந்து 3-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் ஸ்ரீகாந்த். முன்னதாக சிங்கப்பூர் ஓபன், மலேசிய ஓபன் ஆகியவற்றிலும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார் ஸ்ரீகாந்த்.
இதன்மூலம் சர்வதேச அளவில் சூப்பர் சீரிஸ் போட்டியில் தொடர்ச்சியாக 3 இறுதிச் சுற்றுகளில் விளையாடிய 5-ஆவது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஸ்ரீகாந்த். இந்தோனேசியாவின் சோனி துவி குன்கோரோ, மலேசியாவின் லீ சாங் வெய், சீனாவின் சென் லாங், லின் டான் ஆகியோர் மேற்கண்ட சாதனையை செய்த மற்ற 4 பேர் ஆவர்.
வெற்றி குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் இறுதி ஆட்டத்தில் விளையாடினேன். அதைத் தொடர்ந்து இந்தோனேசிய ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடினேன். இப்போது ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் விளையாடவுள்ளேன். இதுபோன்று விளையாட வேண்டும் என்பது என்னுடைய கனவாகும். அது இப்போது நனவாகியிருக்கிறது.
யூகியுடனான அரையிறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டுக் கோப்போடு விளையாடினேன். ஆரம்பத்தில் யூகிக்கு எளிதாக புள்ளிகளைப் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. அதனால் இப்போது இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறேன்' என்றார்.
ஸ்ரீகாந்த் தனது இறுதிச் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்குடன் மோதுகிறார். முன்னதாக சென் லாங் தனது அரையிறுதியில் 26-24, 15-21, 21-17 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் லீ ஹியூனைத் தோற்கடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT