முகப்பு
செய்திகள்

இன்றிரவு கொண்டாட்டம்: ஆட்ட நாயகன் ராகுல் குதூகலம்!

சொந்த மண்ணில் சாதித்துக் காட்டுவதை விடவும் வேறு என்ன பெருமை இருக்கமுடியும்?

Updated On : 7 மார்ச், 2017 at 3:53 PM
பகிர்:

சொந்த மண்ணில் சாதித்துக் காட்டுவதை விடவும் வேறு என்ன பெருமை இருக்கமுடியும்?

பெங்களூர் டெஸ்டில் அனைவரும் ரன் எடுக்கத் தடுமாறியபோது இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் எடுத்த ஒரே வீரர், பெங்களூரைச் சேர்ந்த கேஎல் ராகுல். 

முதல் இன்னிங்ஸில் 90 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

Advertisement

இந்த வெற்றி குறித்து அவர் கூறும்போது: இந்த ஆடுகளத்தில் கடைசியாக 150 ரன்கள் எடுப்பதே கடினம். அது இலக்காக இருந்தாலே நாம் 30 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயிக்க முடியும் என்று கூறியிருந்தேன். அதுதான் நடந்துள்ளது. எனக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தாலும் சில ஷாட்களை விளையாடாமல் தவிர்த்தேன். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் நல்ல உடற்தகுதியுடன் விளையாடமுடிந்தது. இந்த இளம் இந்திய அணி எவ்வளவோ வெற்றிகள் பெற்றிருந்தாலும் இந்த டெஸ்ட் வெற்றி மிகவும் ஸ்பெஷல் ஆனது. இன்றிரவு இந்த வெற்றியை முன்வைத்துக் கொண்டாட உள்ளோம். நாளை முதல் தான் ராஞ்சி டெஸ்ட் போட்டி குறித்து யோசிக்கப் போகிறோம் என்று குதூலகத்துடன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.