முகப்பு
செய்திகள்

டெஸ்ட் மேட்சில் கோலிக்குக் காயம்! ரசிகர்கள் கவலை!

இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஃபீல்டிங் செய்யும்போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:14 AM
பகிர்:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்மித் அபாரமாக விளையாடி சதமெடுத்துள்ளார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஸ்மித் 117 ரன்களுடனும் மேக்ஸ்வெல் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் 40-வது ஓவரின்போது இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஃபீல்டிங் செய்யும்போது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் ஓய்வறைக்குச் சென்றார். பிறகு அவர் ஓய்வறையில் சிகிச்சை மேற்கொண்டார். தொடர்ந்து ஓய்வும் எடுத்துக்கொண்டார். கோலிக்குப் பதிலாக ரஹானே இந்திய கேப்டனாகச் செயல்பட்டார்.

இன்றிரவுக்குள் கோலிக்கு ஸ்கேன் எடுத்து பரிசோதிக்கப்படும். நாளை காலை காயத்தின் தன்மை குறித்த விவரங்கள் வெளியாகும்.

இந்தக் காயத்தினால் இந்த டெஸ்ட் மேட்சில் விளையாடாமல் போகவோ அல்லது அடுத்த டெஸ்டிலும் தொடர்ந்து விளையாடாமல் போகவும் வாய்ப்பிருப்பதாக அறியப்படுகிறது. ஸ்கேனுக்குப் பிறகு நிலவரம் துல்லியமாகத் தெரியவரும். கோலியின் காயத்தால் அவர் அணியிலிருந்து விலகக்கூடாது என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →