செய்திகள்

எம்சிடி தேர்தல்: ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றம்

DIN

தில்லி மாநகராட்சித் (எம்சிடி) தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்களில் சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதையொட்டி அங்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் ஆட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னதாக, டெல்லி டேர்டெவில்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் தில்லியில் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது.
தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, டெல்லி டேர்டெவில்ஸ் தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்து, மே 6-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாறாக, மும்பை அணி தனது சொந்த மண்ணில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதும் ஆட்டம் ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. மும்பை-தில்லி ஆட்டத்தின் மாற்றம் காரணமாக, புணே-ஹைதராபாத் இடையே ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுவதாக இருந்த ஆட்டம், முன்கூட்டியே மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT