செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி:  தமிழ்நாடு சாம்பியன்! தினேஷ் கார்த்திக் அபார சதம்!

தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

எழில்

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் பெங்கால் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

தில்லியில் இன்று நடைபெற்ற இந்த இறுதிச்சுற்றில் முதலில் பேட் செய்த தமிழக அணி 47.2 ஓவர்களில் 217 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 112 ரன்கள் குவித்தார். பெங்கால் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த பெங்கால் அணியில் சேட்டர்ஜி 79 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் குவித்தபோதும், மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் அந்த அணி 45.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகத் தரப்பில் அஸ்வின் கிறிஸ்ட், முகமது, ரஹில் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சதமடித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT