முகப்பு
செய்திகள்

யு-17 உலகக் கோப்பை கால்பந்து: கொல்கத்தாவில் இறுதிப் போட்டி!

அனைவரும் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில்..

Updated On : 27 மார்ச், 2017 at 5:16 PM
பகிர்:

இந்தியாவில் நடத்தப்படவுள்ள 17 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆரம்ப அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 28-ஆம் தேதி வரையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நவி மும்பை, புது தில்லி, கோவா, கொச்சி, குவாஹாட்டி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறுகிறது.

அனைவரும் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் அக்டோபர் 28 அன்று நடைபெறவுள்ளது. குவாஹாத்தி மற்றும் நவி மும்பையில் அரையிறுதி ஆட்டங்களும் காலிறுதி ஆட்டங்கள் கோவா, குவாஹாட்டி, கொச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் நடைபெறுகின்றன.  

Advertisement

அக்டோபர் 6-ம் தேதி புது தில்லி மற்றும் நவி மும்பை ஆகிய இரு நகரங்களிலும் உலகக் கோப்பை போட்டி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.