முகப்பு
செய்திகள்

மேக்ஸ்வெல் தலைமையின் கீழ் ஆடுவதில் சிரமமா? சாஹா பதில்!

ஐபிஎல் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒன்றாக விளையாட வேண்டிய சூழல்.

Updated On : 30 மார்ச், 2017 at 6:33 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று கோலி சொன்னாலும் சொன்னார், புதுவிதமான பிரச்னைகள் எல்லாம் உருவாகியுள்ளன. (பிறகு கோலி தன்னுடைய பேட்டி குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளார்.)

ஐபிஎல் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஒன்றாக விளையாட வேண்டிய சூழல். டெஸ்ட் தொடரில் போட்டி மனப்பான்மையுடன் விளையாடிவிட்டு இங்கு நண்பர்களாக ஒரே அணியில் விளையாடுவது சாத்தியமா?

பஞ்சாப் ஐபிஎல் அணியின் கேப்டன், மேக்ஸ்வெல். இந்த அணியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹாவும் இடம்பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே நட்புறவு எப்படி இருக்கும்? சாஹா கூறுகிறார்:

Advertisement

இது ஐபிஎல். பஞ்சாப் அணியின் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன். டெஸ்ட் தொடரில் நடந்தவற்றை இப்போது எண்ணிப் பார்க்கக்கூடாது. தொடரை வென்ற பிறகு நல்ல மனநிலையில் உள்ளேன். எனவே மேக்ஸ்வெல் தலைமையின் கீழ் ஆடுவதில் எனக்கு எவ்வித சங்கடமும் இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.