முகப்பு
செய்திகள்

ரிஷப் பந்த்தைப் புகழ்ந்து தள்ளும் சச்சின், சேவாக்!

ரிஷப்பின் அதிரடி ஆட்டத்துக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்துள்ளார்கள்.

செய்திகள்

ரிஷப் பந்த்தைப் புகழ்ந்து தள்ளும் சச்சின், சேவாக்!

ரிஷப்பின் அதிரடி ஆட்டத்துக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்துள்ளார்கள்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:27 PM
பகிர்:

நேற்றைய ஐபிஎல் ஆட்டம் மிகவும் சிறப்பானது.

20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை குஜராத் குவித்தாலும், இந்த இலக்கை ஊதித்தள்ளியது டெல்லி அணி. டெல்லியின் இளம் வீரர்கள் அசத்தினார்கள். ரிஷப் பந்த் 43 பந்துகளில் 9 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ரிஷப்பின் அதிரடி ஆட்டத்துக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்துள்ளார்கள். சச்சின் மிகவும் ஊக்கம் தரும் வகையில் பாராட்டியுள்ளார். 

சச்சின் தன்னுடைய ட்வீட்டில் கூறியதாவது: நான் பார்த்த ஐபிஎல் போட்டியின் மிகச்சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. கடந்த 10 ஐபிஎல் போட்டிகளையும் சேர்த்து என்று கூறியுள்ளார்.

அதிரடி வீரர் சேவாக்கும் தன் பங்குக்கு ரிஷப் பந்தைப் பாராட்டித் தள்ளியுள்ளார். அவர் கூறியதாவது:

தன் மீது நம்பிக்கை வைத்து, கூடுதலாகப் பந்தை அடிக்கக்கூடிய அசாத்திய திறமையும் கொண்டுள்ள பேட்ஸ்மேனை எனக்கு மிகவும் பிடிக்கும். ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடியுள்ளார் என்று கூறியுள்ளார். 

முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தன்னுடைய ட்வீட்டில், ரிஷப் பண்ட்டை சாம்பியன்ஸ் டிராபிக்குத் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →