செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி போட்டியை முன்னிட்டு ஐபிஎல்-ஐ விட்டுவிலகும் வெளிநாட்டு வீரர்கள்!

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்லி அணிதான்...

எழில்

ஐபிஎல் முடிய இன்னமும் நாள் இருக்கிறது. முக்கியமான ஆட்டங்கள் எல்லாம் மீதமுள்ளன.

ஆனால் ஜூன் 1 அன்று தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காகத் தீவிர பயிற்சி மேற்கொள்ள ஐபிஎல்-லில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் பலர் விலகிவிட்டார்கள். 

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது டெல்லி அணிதான். அந்த அணி வீரர்களான ரபடா, கிறிஸ் மாரிஸ், மேத்யூஸ் ஆகிய வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியை முன்னிட்டு ஐபிஎல்-லில் இருந்து விலகியுள்ளார்கள். 

மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ள டெல்லி அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளெஸ்ஸி, இதே காரணங்களை முன்வைத்து புணே அணியை விட்டு விலகினார். 

தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் இந்த மாதம் (மே 24 - 29) 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆடவுள்ளது. இதன்பிறகு சாம்பியன்ஸ் டிராபி போட்டி உள்ளது. ஜூன் 3 அன்று தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியைச் சந்திக்கிறது தென் ஆப்பிரிக்கா. எனவே இதற்குரிய பயிற்சிகளை மேற்கொள்வதற்காக ஐபிஎல்-லை விட்டு விலகியுள்ளார்கள் தென் ஆப்பிரிக்க வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் ஆயிஷா! வைல்டு கார்டு என்ட்ரி!

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏஐ உதவியுடன் உறவினரின் குரலில் வரும் மோசடி அழைப்பு! எச்சரிக்கை!!

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது

10 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

SCROLL FOR NEXT