செய்திகள்

தொடரும் ஐபிஎல் சூதாட்டம்: டெல்லியில் ஆறு பேர் கைது!

சூதாட்டத்தால் ஐபிஎல்-லில் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில்...

எழில்

நேற்று டெல்லி - குஜராத் அணிகளிடையே உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இந்த 50-ஆவது லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது டெல்லி டேர்டெவில்ஸ். அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயர் 57 பந்துகளில் 2 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 96 ரன்கள் குவித்தார். 

இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக டெல்லியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆறுபேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. 

சதாரா பகுதியில் நடைபெற்ற சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் காவல்துறை தீவிர சோதனை நடத்தியதில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரைக் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், கைபேசிகள், எல்சிடி-கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

சூதாட்டத்தால் ஐபிஎல்-லில் ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் இந்தச் செய்தி ஐபிஎல் நிர்வாகத்தினரிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |

SCROLL FOR NEXT