செய்திகள்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு மறுப்பு

DIN

ஆண்டின் 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டனர்.
பிரெஞ்சு ஓபனில் 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றவரான ஷரபோவா, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. அவர், தடைக்காலம் முடிந்ததையடுத்து, கடந்த மாதம் சர்வதேச டென்னிஸுக்கு திரும்பினார்.
எனினும் நீண்ட நாள்கள் விளையாடாததன் காரணமாக அவர் தரவரிசையில் பின்னடைவை சந்தித்தார். தற்போது 211-ஆவது இடத்தில் இருக்கும் ஷரபோவா, தரவரிசை அடிப்படையில் நேரடித் தகுதி பெற முடியாது. அதனால் தனக்கு வைல்ட்கார்டு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பிரெஞ்சு ஓபன் போட்டி ஏற்பாட்டாளர்கள் வைல்ட்கார்டு வழங்க மறுத்துவிட்டதால், தொடர்ந்து 2-ஆவது ஆண்டாக பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஷரபோவா.
இது தொடர்பாக பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னாட் கூறியிருப்பதாவது: பிரெஞ்சு ஓபனில் ஷரபோவா வென்ற இரு பட்டங்களை அவரிடம் இருந்து யாரும் பறிக்கவில்லை. அதேநேரத்தில் வைல்ட்கார்டு வழங்குமாறு ஷரபோவா விடுத்திருந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்தவர்களுக்கு மட்டுமே வைல்ட்கார்டு வழங்கப்படும். ஊக்கமருந்து பயன்படுத்தியவர்களுக்கு வைல்ட்கார்டு வழங்க முடியாது என தெரிவித்துள்ளார்.
டபிள்யூடிஏ தலைவர் கண்டனம்: ஷரபோவாவுக்கு வைல்ட்கார்டு வழங்க பிரெஞ்சு ஓபன் போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்திருப்பதற்கு மகளிர் டென்னிஸ் சங்க (டபிள்யூடிஏ) தலைவர் ஸ்டீவ் சைமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'இது அடிப்படையற்ற செயல். அவர் ஏற்கெனவே விளையாட்டு தீர்ப்பாயம் அளித்த தண்டனையை அனுபவித்துவிட்டார். அதையும் தாண்டி இப்போது அவரை தண்டிக்க எந்த அடிப்படையும் இல்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT