செய்திகள்

ஐபிஎல் நாயகர்கள்!

இந்த சீசனின் மதிப்புமிக்க வீரர் விருது புணே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸூக்கு வழங்கப்பட்டது... 

DIN

ஐபிஎல் போட்டியின் முடிவில் வழங்கப்பட்ட விருதுகள்:

டேவிட் வார்னர் 641

இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் 641 ரன்களுடன் முதலிடத்தைப்பிடித்தார்.

புவனேஸ்வர் குமார் 26

இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமையை ஹைதராபாத் வீரர் புவனேஸ்வர் குமார் தட்டிச் சென்றார். 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடந்த சீசனிலும் புவனேஸ்வர் குமார்தான் அதிக விக்கெட் (23) வீழ்த்தினார்.

26 சிக்ஸர்

இந்த சீசனில் அதிக சிக்ஸர்களை விளாசியவருக்கான விருது பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெலுக்கு கிடைத்தது. அவரும், வார்னரும் தலா 26 சிக்ஸர்களை விளாசியிருந்தனர். எனினும் அதிக தூரம் சிக்ஸர் அடித்ததன் அடிப்படையில் மேக்ஸ்வெலுக்கு விருது கிடைத்தது.

அதிவேக அரை சதம்

இந்த சீசனில் அதிவேக அரை சதமடித்தவருக்கான விருது கொல்கத்தா நைட் ரைடர்ஸின் சுநீல் நரேனுக்கு கிடைத்தது. சுழற்பந்து வீச்சாளரான நரேன், இந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்தினார். பெங்களூருக்கு எதிராக அவர் 15 பந்துகளில் அரை சதம் கண்டார்.

வளர்ந்து வரும் வீரர்

இந்த சீசனில் சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருது குஜராத்தின் பாசில் தம்பிக்கு வழங்கப்பட்டது. அவர் இந்த சீசனில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மதிப்புமிக்க வீரர்

இந்த சீசனின் மதிப்புமிக்க வீரர் விருது புணே ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸூக்கு வழங்கப்பட்டது. அவர் 12 ஆட்டங்களில் விளையாடி ஒரு சதத்துடன் 316 ரன்களும், 12 விக்கெட்டுகளும் எடுத்தார்.

யுவராஜ், கம்பீருக்கு விருது

பார்வையாளர்களை பரவசப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான ஷாட்டை ஆடியதற்கான விருது யுவராஜ் சிங்கிற்கும், சிறந்த "ஸ்டைலிஷ்' பேட்ஸ்மேன் விருது கெளதம் கம்பீருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த கேட்சுக்கான விருது: சுரேஷ் ரெய்னா

ஃபேர் பிளே விருது: குஜராத் அணி

சிறந்த ஆடுகள அமைப்புக்கான விருது: பஞ்சாப் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கங்களுக்கும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT