முகப்பு
செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: வலைப்பயிற்சியை யுவ்ராஜ் சிங் தவறவிட்டதன் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்தக் குழுவில் யுவ்ராஜ் சிங் இடம்பெறவில்லை.

Updated On : 27 மே, 2017 at 11:19 AM
பகிர்:

நேற்று லண்டனில் இந்திய கிரிக்கெட் அணி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் இந்தக் குழுவில் யுவ்ராஜ் சிங் இடம்பெறவில்லை. இதனால் அவருடைய உடற்தகுதி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.

யுவ்ராஜ் சிங்குக்கு லண்டன் சென்றவுடன் காய்ச்சல் உண்டானது. இதனால் அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை. ஓரிரு நாளில் அவர் சரியாகிவிடுவார் என்று தகவல் கிடைத்துள்ளது. 

ஜூன் 1-ம் தேதி போட்டி தொடங்குகிறது. அதற்கு முன்பு ஞாயிறு அன்று நடைபெறுகிற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா. இருநாள்கள் கழித்து வங்கதேசத்துடன் மோதுகிறது. ஜூன் 4-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.